Bison Gym Manager
தனியுரிமைக் கொள்கை
சுருக்கமாக, எளிமையாக: இந்த இணையதளம் எதைச் சேகரிக்கிறது, ஏன், அதை வைத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 1 அக்டோபர், 2026
நாங்கள் யார்
Bison Gym Manager என்பது Aarith (“நாங்கள்”) நிறுவனத்தின் தயாரிப்பு. இந்தக் கொள்கை usebison.in என்ற இந்த இணையதளத்துக்குப் பொருந்தும்.
நாங்கள் எதைச் சேகரிக்கிறோம்
Callback படிவத்தில் நீங்கள் type செய்வதை மட்டுமே: உங்கள் ஜிம்மின் பெயர், உங்கள் பெயர், மொபைல் எண், email, நகரம், members எண்ணிக்கை, கிளைகளின் எண்ணிக்கை, அழைக்க வசதியான நேரம், உங்கள் செய்தி, தொடர்புகொள்ள உங்கள் ஒப்புதல். நீங்கள் எந்தப் பக்கத்திலிருந்து, எப்போது அனுப்பினீர்கள் என்பதையும் சேமிக்கிறோம்.
இந்த இணையதளத்தில் விளம்பர அல்லது analytics cookies பயன்படுத்துவதில்லை. எல்லா இணையதளங்களையும் போல, பக்கங்கள் load ஆகும்போது எங்கள் hosting-க்கும் Google Fonts சேவைக்கும் உங்கள் IP முகவரியும் browser விவரங்களும் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியை உங்கள் browser-இன் local storage-ல் நினைவில் வைக்கிறோம்; அது உங்கள் device-ஐ விட்டு வெளியே போவதில்லை.
அதை எப்படிப் பயன்படுத்துகிறோம்
Bison Gym Manager பற்றி உங்களைத் தொடர்புகொள்ள மட்டுமே — திருப்பி அழைக்க, உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, விலை விவரம் தர. உங்கள் விவரங்களை நாங்கள் விற்பதில்லை, யாருடைய சொந்த marketing-க்கும் பகிர்வதில்லை.
எங்கே சேமிக்கப்படுகிறது
Callback கோரிக்கைகள் Google Firebase (Cloud Firestore)-ல் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. Bison Gym Manager குழு மட்டுமே அவற்றைப் படிக்க முடியும்.
எவ்வளவு காலம் வைத்திருப்போம்
உங்களை follow up செய்ய எங்களுக்குத் தேவைப்படும் வரை, அல்லது நீங்கள் அழிக்கச் சொல்லும் வரை.
உங்கள் தேர்வுகள்
நீங்கள் அனுப்பிய விவரங்களைப் பார்க்க, திருத்த அல்லது அழிக்க, அல்லது உங்களைத் தொடர்புகொள்வதை நிறுத்த எங்களிடம் கேட்கலாம். அதற்கு, hello@aarith.com என்ற முகவரிக்கு email அனுப்புங்கள்.
Bison Gym Manager பயன்படுத்தும் ஜிம்களின் members
Bison Gym Manager பயன்படுத்தும் ஒரு ஜிம்மில் நீங்கள் member என்றால், அதன் member app, portal-ல் உங்களைப் பற்றி எதைச் சேகரிக்கிறது, ஏன் என்பதை உங்கள் ஜிம் முடிவு செய்கிறது. உங்கள் data-வுக்கு உங்கள் ஜிம்தான் data fiduciary; அதன் சொந்த தனியுரிமைக் கொள்கையே பொருந்தும் — அது பற்றி உங்கள் ஜிம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
மாற்றங்கள்
இந்தக் கொள்கையை மாற்றினால், இந்தப் பக்கத்தையும் மேலே உள்ள தேதியையும் புதுப்பிப்போம். மொழிபெயர்ப்புக்கும் ஆங்கிலப் பதிப்புக்கும் வேறுபாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பே பொருந்தும்.